LATEST NEWS
வெளிநாட்டில் கணவர், மகளுடன் மாடர்ன் உடையில்… சொல்வதெல்லாம் உண்மை லஷ்மி ராமகிருஷ்ணன்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் சில விமர்சனங்களையும் சந்தித்தது.
அது மட்டுமல்லாமல் லஷ்மி ராமகிருஷ்ணன் பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் முக்கிய விவாதங்களை எழுப்பியது. இவர் தற்போது தான் இயக்கம் புது படத்திற்காக இளையராஜா உடன் கூட்டணி வைத்துள்ளார்.
இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் ஐந்தாவது படமாக ஆர் யூ ஓகே பேபி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, ரோபோ சங்கர் மற்றும் மிஸ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் சில புகைப்படங்களை வெளியிட்டு, நாம் எங்கிருந்தாலும் உலகின் எந்த பகுதியிலும் சொல்வதெல்லாம் உண்மை பின் தொடர்பவர்களை சந்திப்பில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆர் யூ ஓகே பேபி திரைப்படத்திற்கும் எனது அனுபவத்துடன் சில உறுதியான தொடர்பு உள்ளது என்று கூறி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
