LATEST NEWS
ஒத்த வார்த்தையில் லோகேஷ் கனகராஜை கண் கலங்க வைத்த ரசிகர்… வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் வெற்றிப் பாதையை மறக்க முடியாத வகையில் செதுக்கியுள்ளார். இவரின் தனித்துவமான கதை சொல்லும் திறமையும் இயக்குனரின் நேர்த்தியும் அர்ப்பணிப்பு உள்ள ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளது.
தற்போது இவர் விஜையுடன் தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படபிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் திரைப்படத் துறையில் தனது குறிப்பிடத்தக்க பயணத்தின் மதிப்பு மிக்க நுண்ணறிவுகளை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜை பார்த்து அன்பு மகனே என்று கூறி பேசிய நிலையில் மேடையில் லோகேஷ் கனகராஜ் கண்கலங்கி நின்றார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
