LATEST NEWS
புதிதாக கார் வாங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. விலை எவ்வளவு தெரிஞ்சா ஆடி போயிருவீங்க.. இன்னும் என்னலாம் செய்யப் போறாரோ..??

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் வெற்றிப் பாதையை மறக்க முடியாத வகையில் செதுக்கியுள்ளார். இவரின் தனித்துவமான கதை சொல்லும் திறமையும் இயக்குனரின் நேர்த்தியும் அர்ப்பணிப்பு உள்ள ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளது.
தற்போது இவர் விஜயுடன் தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படபிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் சொத்து தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லியோ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த காரின் பெயர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் ஆகும். இதனை அறிந்த இணையவாசிகள் பலரும் லியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு இவர் இன்னும் என்ன செய்வாரோ என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.