லட்சுமி மேனன் , ராகவா லாரன்ஸ் , வடிவேலு என ‘சந்திரமுகி 2’ நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஏஜென்ட் டீனா… இதோ வீடியோ…  – cinefeeds
Connect with us

LATEST NEWS

லட்சுமி மேனன் , ராகவா லாரன்ஸ் , வடிவேலு என ‘சந்திரமுகி 2’ நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஏஜென்ட் டீனா… இதோ வீடியோ… 

Published

on

தமிழ் திரைப்படங்களில் உதவி நடன இயக்குனராக பணியாற்றி பிரபலமானவர் நடிகை வசந்தி. நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட வசந்தி நடன கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி அவரது திறமையால் பல நடன இயக்குனர்களுடன் உதவி நடன இயக்குனராக பணியாற்றினார். நயன்தாரா, விஜய் , அஜித் என டாப் ஹீரோக்களுக்கு கோரியோகிராப்  செய்துள்ளார்.

தமிழ் ,தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் வசந்தி. நடிகர் விஜய் நடித்த பகவதி படத்தில் அல்லு அல்லு பாடலிலும், அஜித் நடித்த வில்லன் படத்தில் ‘அடிச்சா நெத்தியடி’ பாடலிலும் நடனமாடியிருப்பார். உதவி நடன இயக்குனராக பணியாற்றியவர் வசந்தி. அண்மையில் வெளியான வலிமை படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாதிரி பாடலுக்கு பணியாற்றியுள்ளார்.

Advertisement

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் அவர் தற்பொழுது நடன இயக்குனர் தினேஷுடன் பணியாற்றி வருகிறார். விக்ரம் படத்தின் மூலம் தற்பொழுது நடிகையாகவும் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை  ஏற்படுத்தியுள்ளது.

வசந்தி விக்ரம் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ஏஜென்டினா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. இத்திரைப்படத்தில் இவர் வரும் காட்சிகள் வெறும் 4 நிமிடங்கள் என்றாலும் அந்த ஆக்சன் காட்சியால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் வசந்தி.

Advertisement

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஏஜென்டினா. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சுமி மேனன் , ராகவா லாரன்ஸ் , வடிவேலு என ‘சந்திரமுகி 2’ நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.  இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vasanthiguru (@agent_tina_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in