‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியுடன்  நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?… அம்மாடி! தலையே சுத்துதே…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியுடன்  நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?… அம்மாடி! தலையே சுத்துதே….

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்பொழுது ரசிகர்கள் எதிர்பார்க்கும் திரைப்படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

Advertisement

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. கடந்த ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

சமீபகாலமாக இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்சம்பளம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் ரூ. 80 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in