VIDEOS
விஜயகாந்த் பட நடிகை ராதிகா சௌத்ரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை ராதிகா சௌத்ரி. இவர் 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுபட போகுதய்யா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த டைம், சிம்மாசனம் மற்றும் குரோதம் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜயின் கேரியரில் முக்கிய திரைப்படமாக இருக்கும் பிரியமானவளே என்ற திரைப்படத்திலும் சௌமியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சௌத்ரி நடித்திருந்தார். அதன் பிறகு சினிமா பக்கம் வராமல் குடும்பம் மற்றும் குழந்தைகள் என செட்டிலான இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவில் உடல் எடை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
