CRIME
அடக்கடவுளே.. காதில் இயர்போன்.. பின்னால் வந்த ரயில்.. சில நொடிகளில் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
ஹைதராபாத் பொல்லாரம் பகுதியில் சமீபத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் ரயில் விபத்து, நவீன தொழில்நுட்பமான இயர்போன்களின் தவறான பயன்பாடு எவ்வாறு மனித உயிர்களைக் காவு வாங்குகிறது என்பதற்கு ஒரு கொடூரமான சாட்சியாக மாறியுள்ளது. ரயில் தண்டவாளத்தின் ஓரமாக, வெளிப்புற உலகத்தைப் பற்றிய எந்தவொரு சுயநினைவும் இன்றி இயர்போனில் பேசியபடி நடந்து சென்ற நபர் ஒருவரை, பின்னால் இருந்து அதிவேகமாக வந்த ரயில் சில நொடிகளில் மோதித் தள்ளியது. இந்த விபத்தில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், சமூகத்தில் இயர்போன் கலாச்சாரத்தால் அதிகரித்துவரும் ஆபத்துகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நமது காதுகளில் மாட்டி இருக்கும் இந்தச் சிறிய சாதனங்கள், சுற்றுப்புற உலகத்துடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்து, மரணத்தின் விளிம்பிற்கு மனிதர்களை அழைத்துச் செல்கின்றன. ரயில் போன்ற ஒரு மாபெரும் வாகனம் அத்தனை பயங்கரமான சத்தத்துடன் ஹாரன் அடித்தபடி நெருங்கி வருவதைக் கூடக் கவனிக்க முடியாத அளவிற்கு, மனிதர்களைப் பரவசப் பரதேசிகளாக மாற்றும் இந்த விபரீதப் பழக்கம் பெரும் ஆபத்தானது. இது வெறும் ரயில் தண்டவாளங்களில் மட்டுமல்லாமல், சாலைகளில் பைக் மற்றும் கார்களை இயர்போன் மாட்டிக்கொண்டு ஓட்டும்போதும் தொடர்கிறது. இதனால், பின்னால் வரும் வாகனங்களின் ஹாரன் சத்தமோ அல்லது அவசர ஆம்புலன்ஸின் சைரன் ஒலியோ கேட்காமல், தங்களின் உயிரோடு சேர்த்து சக வாகன ஓட்டிகளின் உயிரையும் பலர் பணையம் வைக்கின்றனர்.
இந்த உலகத்தில் நமது நிண்டு வாழ்வை விட முக்கியமான பொழுதுபோக்கோ அல்லது உயிரை விட அவசரமான ஒரு போன் காலோ இருக்க முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். நாம் பேசும் போன் காலைச் சற்று நேரத்திற்குப் பிறகு பேசலாம், கேட்கும் பாடலை அப்புறம் கூடக் கேட்கலாம்; ஆனால், ஒரு கண நேர அலட்சியத்தால் பறிபோகும் உயிரை எந்தச் சக்தியாலும் மீண்டும் கொண்டுவர முடியாது. குறிப்பாக, இளைஞர்கள் இந்த ஆபத்தான மாயையிலிருந்து உடனடியாக விடுபட வேண்டும். சாலையில் நடக்கும்போதோ, வாகனங்களை இயக்கும்போதோ இயர்போன் பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிட்டு, வீட்டில் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் குடும்பத்தினரை நினைவில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
