“நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான்..!” கல்லூரியிலிருந்து பேசிக்கொண்டே வந்த மாணவர்கள்.. நடுரோட்டில் வளைத்துப் பிடித்து கிராம மக்கள் செய்த விசித்திர காரியம்.. அதிர்ந்து போன நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான்..!” கல்லூரியிலிருந்து பேசிக்கொண்டே வந்த மாணவர்கள்.. நடுரோட்டில் வளைத்துப் பிடித்து கிராம மக்கள் செய்த விசித்திர காரியம்.. அதிர்ந்து போன நெட்டிசன்கள்..!!

Published

on

பீகார் மாநிலத்தில், கல்லூரியிலிருந்து ஒன்றாகப் பேசிக்கொண்டே வீட்டிற்கு நடந்து சென்ற மாணவ-மாணவியை, கிராம மக்கள் பிடித்து வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்துள்ள விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாணவி பிரபல யூடியூப் ஆசிரியரான ‘கான் சார்’ அவர்களின் பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் படித்து வருவதாகவும், அந்த மாணவனும் படிப்பு சம்பந்தமாகப் பேசிக்கொண்டே அவளுடன் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் சாலையில் சாதாரணமாகப் பேசிக்கொண்டு சென்றதை மட்டும் பார்த்த கிராம மக்கள், அவர்களின் விளக்கத்தைக் காது கொடுத்துக் கேட்காமல், இருவரையும் பிடித்து அங்குள்ள ஒரு கோயில் வளாகத்தில் வைத்து உடனடியாகத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டுமே என்றும், தங்களுக்கு இப்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை, மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றும் அந்த மாணவ-மாணவி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுள்ளனர். இருப்பினும், அவர்களின் படிப்பு கனவையோ அல்லது விருப்பத்தையோ சற்றும் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர். தற்போதைய சூழலில் பீகாரில் இதுபோன்ற கட்டாயத் திருமணங்கள் மிகவும் சாதாரணமாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in