“12 தாளங்கள்.. ஜீரோ மிஸ்டேக்..” 2 வயதில் இந்திய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்த குட்டி தபலா கலைஞர்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“12 தாளங்கள்.. ஜீரோ மிஸ்டேக்..” 2 வயதில் இந்திய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்த குட்டி தபலா கலைஞர்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

கர்நாடகாவை சேர்ந்த 2 வயது சிறுமி அருமையாக தபலா வாசித்து இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறாள். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தின் ஹொன்னவரா பகுதியைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்கள் நிரம்பிய சிறுமி ஸ்வராஸ்ரீ ஹெக்டே ஆவார். ஸ்வராஸ்ரீயின் தந்தை குருராஜ் ஹெக்டே ஒரு புகழ்பெற்ற தபலா கலைஞர் ஆவார். தாய் ஸ்ரீலதா ஒரு ஹிந்துஸ்தானி பாடகி மற்றும் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார். சிறுமி ஸ்வராஸ்ரீ தனது ஒரு வயதிலிருந்தே தபலாவில் ஆர்வம் காட்டி, அதன் மீதே உறங்குவாள் என்று பெற்றோர் தெரிவித்தனர்.

அவளது ஆர்வத்தைக் கவனித்த தந்தை, மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஸ்வராஸ்ரீயைத் தன் அருகில் அமர வைத்துப் பயிற்சி அளித்தார். மேலும், அவளுக்கென இரண்டு சிறிய தபலாக்களையும் பிரத்யேகமாக தயாரித்து வழங்கியிருந்தார்.

Advertisement

பெயருக்கு ஏற்றாற்போல ஸ்வராஸ்ரீ, 12 வகையான தாளங்களையும், அவற்றின் Vocal Recitation-யும் எந்த தவறுகளும் இன்றி கற்று வாசித்து மிக இளம் வயது தபலா கலைஞர் என்ற சாதனையை படைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறாள். தற்போது ஸ்வராஸ்ரீ தபலா வாசிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in