TRP -யில் டாப் 10 இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்கள்… முதலிடத்தை தட்டி தூக்கிய புது சீரியல்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

TRP -யில் டாப் 10 இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்கள்… முதலிடத்தை தட்டி தூக்கிய புது சீரியல்…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் TRP ரேட்டிங் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவி சீரியலில் டாப் 10 TRP ரேட்டிங் பிடித்த சீரியல்களை பற்றி இங்கு நாம் பார்க்கலாம்…

1.சிறகடிக்க ஆசை:

Advertisement

சமீபத்தில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட துவங்கப்பட்ட இந்த சீரியல், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் TRP 6.98 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

2.பாக்கியலட்சுமி:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக இருக்கும் பாக்கியலட்சுமி, கணவரை நம்பி மோசம் போனதால் அதிலிருந்து மீண்டு தைரியமாக போராடி அவரையும் அவருடைய குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இந்த சீரியலின் மீதிக்கதை. தற்பொழுது இந்த சீரியல்  6.92 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

3.பாண்டியன் ஸ்டோர்ஸ்:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய நோக்கமே அண்ணன் தம்பிகள் திருமணத்திற்கு பின்னும் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதுதான். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பால் ஒவ்வொருவரும் தனியாக போனாலும் மனதார ஒற்றுமையாக இருக்கிறார்கள். தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் இந்த சீரியல், இந்த வாரம் 5.84 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

4.ஆஹா கல்யாணம்:

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கப்பட்ட ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் டிவி தொடர்களின் TRP லிஸ்டில் 4.88 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எதிர்பாராமல் அரங்கேறி வரும் ட்விஸ்ட் தான் இந்த சீரியலின் வரவேற்புக்கு காரணம்.

5.ஈரமான ரோஜாவே:

Advertisement

பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் இத்தொடர் 4.09 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

6.மகாநதி:

Advertisement

எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியல், இந்த வாரம் 4.04 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

7.மோதலும் – காதலும்:

Advertisement

மோதலும் – காதலும், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் ரீ மேக்காக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு, ரசிகர்கள் மத்தியில் குறைந்த அளவு ஆதரவே கிடைத்து வருகிறது. இந்த வாரம் இந்த சீரியல் 3.38 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

8.தமிழும் சரஸ்வதியும்:

Advertisement

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று ‘தமிழும் சரஸ்வதியும்’ . இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இருந்து வந்தது. சீரியல் கொஞ்சம் டல் அடிக்க தொடங்கி இருப்பதால் இந்த வாரம் 3.36 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

9.செல்லம்மா:

Advertisement

இந்த வாரம் 2.92 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தை பிடித்து  ‘செல்லம்மா’ சீரியல் TRP -யில் மிகவும் பின்தங்கி விட்டது.

10. தென்றல் வந்து என்னை தொடும், கிழக்கு வாசல்:

Advertisement

தற்பொழுது 10-ஆவது இடத்தில் இரண்டு விஜய் டிவியின் இரண்டு சீரியல்கள் பிடித்துள்ளது.

அதாவது புதிதாக ஒளிபரப்பட்ட ‘கிழக்கு வாசல்’ சீரியலும், சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த  ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலும்  2.91 புள்ளிகளை பெற்று 10 – வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in