கொரோனாவால் தாய் வீட்டில் சிக்கிக்கொண்ட மனைவி! வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன்! – cinefeeds
Connect with us

Uncategorized

கொரோனாவால் தாய் வீட்டில் சிக்கிக்கொண்ட மனைவி! வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன்!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பீகார் மாநிலம் பாலிகஞ்ச் மாவட்டம் பரத்புராவை சேர்ந்த தீரஜ் குமார் என்பவரின் மனைவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.அம்மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தாய் வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணால் மீண்டும் கணவனின் வீட்டிற்கு வர முடியவில்லை. இதற்கிடையில் தீரஜ் தனது மனைவிக்கு போன் செய்து, தனது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். ஆனாலும் ஊரடங்கு உத்தரவினால் தீரஜின் மனைவியால் கணவன் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தீரஜ் குமார், ரகுநாத்பூரை சேர்ந்த தனது முன்னாள் கா தலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தீரஜின் முதல் மனைவி, காவல் நிலையத்தில் புகா ர் அளித்தார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் கணவர் தீரஜ் குமாரை கை து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in