LATEST NEWS
கடற்கரையில் அந்த மாதிரி உடையில்… வீடியோ வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை தமன்னா…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். குறுகிய காலகட்டத்திலேயே விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்பொழுது இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.
இதை தொடர்ந்து அவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தற்பொழுது இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை தமன்னா. நடிகை தமன்னாவும் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக இணையத்தில் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இவர்கள் ஒன்றாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை தமன்னா. இவர் தற்பொழுது பிகினி உடையில் கடற்கரையில் சுற்றி திரியும் ஹாட் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
