“பாளையத்து அம்மன்” பாப்பாவா இது..? ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரே.. இப்போ ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்காங்களே..!” – cinefeeds
Connect with us

CINEMA

“பாளையத்து அம்மன்” பாப்பாவா இது..? ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரே.. இப்போ ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்காங்களே..!”

Published

on

90-களில் வெளியான பிரபலமான பக்தி திரைப்படமான ‘பாளையத்து அம்மன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் நடிகை அக்ஷயா ஜெயராம். இப்படத்தில் ‘சத்யா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தனது மழலை மாறாத நடிப்பை வெளிப்படுத்திய இவர், அன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் மற்றும் 90-ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமான முகமாக மாறினார்.

தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக இருக்கும் அக்ஷயா ஜெயராமின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘பாளையத்து அம்மன்’ படத்தில் பார்த்த அந்தச் சின்னஞ்சிறு குழந்தையா இது என்று ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். நவீன உடையில் இருக்கும் அவரது தற்போதைய தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Advertisement

இவர் ‘பாளையத்து அம்மன்’ படம் மட்டுமின்றி, கோட்டை மாரியம்மன், அழகி, தோஸ்த், ராஜ்ஜியம், ஆஞ்சநேயா மற்றும் மனசெல்லாம் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், இவர் மீண்டும் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in