CINEMA
முதலமைச்சர் விஜய் பற்றி சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக் …! ‘ அமைதியாக விஜய் கொடுத்த ரியாக்ஷன்…! சீக்ரெட்டை உடைத்த SK…!மதுரையில் பரபரப்பு…!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் ‘சேயோன்’. ‘நமது தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்க, கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, திட்டமிட்டபடி மே 18ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரைக்கு வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மதுரைக்கு என்று எப்போதுமே தனிப் பவர் உள்ளது; அந்த பவர் சற்றும் குறையாமல் ‘சேயோன்’ திரைப்படம் அமையும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், தான் முழுக்க முழுக்க ஒரு கிராமத்துக் கதைகளத்தில் நடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதாகவும், தற்போதைய கூட்டணி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், “எங்கள் சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தேர்தலில் வென்ற அன்றைய தினத்திலேயே அவருக்குத் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினேன். அவர் எப்போதும் போல வழக்கமான அமைதியுடன், ‘சொல்லுப்பா, நல்லா இருக்கீங்களா?’ என்று நலம் விசாரித்துவிட்டு, எனது வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். அவர் எதைச் செய்தாலும் சிறப்பாகத்தான் செய்வார்; அந்த வகையில் அவரது முதலமைச்சர் பணியும் சிறப்பாகவே இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படமும், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படமும் மோதவிருந்தன. ஆனால், ‘ஜன நாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அப்படம் தள்ளிப்போனது. தற்போது அத்திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், திரையில் டைட்டில் கார்டில் ‘முதலமைச்சர் விஜய்’ என்று பெயர் இடம் பெறுவதைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
