CINEMA
பாலிவுட் முதல் கோலிவுட் வரை…!அண்ணன்-தம்பி பாசம்னா இதுதான்…! நயன்தாராவின் மகன்கள் உயிர் – உலக் செய்த அந்த காரியம்…!பின்னால் பூரிப்போடு நயன்தாரா! வைரலாகும் கியூட் வீடியோ…!
தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் பல சவால்களைக் கடந்து வெற்றிக் கொடி நாட்டியவர். ஆரம்பகாலத்தில் சந்தித்த காதல் தோல்விகள் மற்றும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், கடின உழைப்பால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர் வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. சுமார் ஐந்து ஆண்டுகள் லிவிங்-டுகெதர் உறவில் இருந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் போன்ற பிரமுகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு, வாடகைத் தாய் முறை மூலம் இந்தத் தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆரம்பத்தில் இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், சட்ட விதிமீறல்கள் எதுவும் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது. குழந்தைகள் பிறந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பிலிருந்து விலகிவிடுவார் என்று பலரும் கணித்த நிலையில், அதைத் தகர்க்கும் விதமாக தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவரது கைவசம் ‘டாஸிக்’ (Toxic), ‘மண்ணாங்கட்டி’ போன்ற முக்கியத் திரைப்படங்கள் உள்ளன. மேலும், சல்மான் கானுக்கு ஜோடியாக பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடிப்பு, தொழில் என எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள். வழக்கமாக வருடத்திற்கு இரண்டு முறையாவது மகன்களை வெளிநாட்டிற்குச் சுற்றுலா அழைத்துச் செல்வதை அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், சமீபத்தில் இவர்கள் வெளிநாடு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட கியூட்டான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து வருகிறது.
அந்த வீடியோவில், நயன்தாராவின் மகன்களான உயிரும் உலக்கும் ஒருவருக்கொருவர் தோள் மேல் கை போட்டுக்கொண்டு, ஜாலியாக வெளிநாட்டு வீதியில் நடந்து செல்கின்றனர். தங்களது மழலைகள் பாசத்தோடு நடந்து செல்வதை நயன்தாரா பின்னால் இருந்தபடி மிகுந்த பூரிப்போடும், மகிழ்ச்சியோடும் ரசித்துக் கொண்டே நடந்து செல்கிறார். தாயன்பின் நெகிழ்ச்சியை உணர்த்தும் இந்த அழகான வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகி, நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
