CINEMA
இந்தியன் 3′ ட்ராப்…!காஜல் அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்…!முதல்முறையாக இணையும் புதிய ஜோடி…! ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தில் மறைந்திருக்கும் அந்த மர்மம் என்ன…!
பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவான ‘இந்தியன் 3’ திரைப்படம் மீண்டும் லைகா நிறுவனம் பணம் போட்டு புரொடக்ஷன் செய்தால் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது என்ற தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது. இதனால் காஜல் அகர்வாலின் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திரைப்படம், வரும் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம், MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வழங்கும் இந்தப் படம், ரசாயனப் பொருட்களின் தவறான பயன்பாடு, குறிப்பாக வேளாண்மையில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் (Pesticides) ஏற்படும் அபாயகரமான விளைவுகளைப் பற்றி மிகவும் கூர்மையாகப் பேசுகிறது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள இத்திரைப்படம், ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்’ என்ற அழுத்தமான முழு தலைப்புடன் உருவாகியுள்ளது.
பொது சுகாதாரத்தின் மீது ரசாயனங்கள் ஏற்படுத்தும் மறைமுகமான பேராபத்துகள் மற்றும் தொழில்சார் அலட்சியம் குறித்துப் பேசும் இந்தப் படம், விறுவிறுப்பான கதைக் களத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் கதையாக மட்டும் நின்றுவிடாமல், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு பெரும் நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இதன் டீசர், படத்தின் தீவிரமான உலகை ரசிகர்கள் மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை நிச்சயமாக அதிகரிக்கவும் உதவும் எனத் தயாரிப்புத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இப்படத்தின் மூலம் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இருவரும் முதல்முறையாக இணைந்து திரையில் தோன்றுகின்றனர். இவர்களது அழுத்தமான நடிப்பு, கதைக்கு உணர்வுபூர்வமான ஆழத்தையும் தீவிரத்தையும் பார்வையாளர்களுக்குச் சிறப்பாகக் கடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவில், மங்கேஷ் தாக்டே இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று முக்கிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஜீ ஸ்டுடியோஸ் மூலம் உலக அளவில் ரிலீஸ் செய்யப்படத் தயாராகி வருகிறது
