LATEST NEWS
பெண் காவலர்கள் முதல் பொதுமக்கள் வரை…!ஆடையில்லாமல் தனிமையில்…” – ஒரே ஸ்டேஷனில் காதல் லீலைகள்…!தூத்துக்குடியை உலுக்கிய பகீர் விவகாரம்…!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் (உதவி ஆய்வாளர்) மற்றும் மாவட்ட எஸ்பி-யின் தனிப்பிரிவு காவலர் இடையே நிலவி வந்த திருமணத்திற்கு மீறிய உறவு, தற்போது காவல் துறையினரின் அதிரடி பணியிட மாற்ற நடவடிக்கையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒட்டப்பிடாரம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீ மற்றும் அங்கு தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்த விக்னேஷ் ஆகிய இருவருமே இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து பெண் அதிகாரியின் கணவர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பிரிவு காவலரான விக்னேஷ், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார். அந்த சமயங்களில் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களான பெண்கள் மற்றும் சக பெண் காவலர்களிடம் செல்போன் எண்களைப் பெற்று, அவர்களிடம் தவறான உறவு வைப்பதையும், சிலரை மிரட்டித் தனது ஆசைக்கு இணங்க வைப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார்களால் ஏற்கனவே பலமுறை மாற்றப்பட்டாலும், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தொடர்ந்து தனிப்பிரிவிலேயே நீடித்து வந்துள்ளார். இந்த சூழலில் தான், ஒட்டப்பிடாரத்தில் பணியாற்றி வந்த அருள்மொழி ஸ்ரீயுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் தவறான உறவில் இருந்துள்ளார்.
இருவரின் இந்தத் தொடர்பு பற்றி சக காவலர்கள் மாவட்ட எஸ்பி-யிடம் புகாரளிக்க முயன்றபோது, தனிப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் இதனை மறைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் மற்றும் அருள்மொழி ஸ்ரீ ஆகியோர் தனிமையில் இருக்கும் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை விக்னேஷ் அவரது செல்போனுக்கு அனுப்பியுள்ளார். பணி முடிந்து வீடு திரும்பிய அருள்மொழி, அந்த மெசேஜ்களை அழிக்க மறந்துள்ளார். இதனைத் தற்செயலாகப் பார்த்த அவரது கணவர் சதீஷ் அதிர்ச்சியடைந்து மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆதாரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டப்படியான நடவடிக்கை கோரி புகார் அளித்தார்.
இப்புகார் குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே இருந்த தவறான உறவு மற்றும் செல்போன் ஆதாரங்கள் உண்மை என்பது உறுதியானது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு எஸ்பி உத்தரவின் பேரில், பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீ சூரங்குடி காவல் நிலையத்திற்கும், தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கிலிருந்து தப்பிக்க விக்னேஷ் அரசியல் பிரமுகர்களின் உதவியை நாடி வரும் சூழலில், இவ்வளவு பெரிய ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட இருவரையும் சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்யாமல், வெறும் இடமாற்றம் மட்டும் செய்திருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
