மும்பையில் அசிங்கப்பட்ட ஹார்திக்…சிஎஸ்கே-வுக்கு வண்டியை கட்டும் ஹார்திக்…தோனிக்கு மாற்று வீரராக களமிறங்கும் ஹார்திக் பாண்டியா…தோனி போட்ட ரகசிய ஸ்கெட்ச்…சென்னைக்கு அடித்த மெகா ஜாக்பாட்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மும்பையில் அசிங்கப்பட்ட ஹார்திக்…சிஎஸ்கே-வுக்கு வண்டியை கட்டும் ஹார்திக்…தோனிக்கு மாற்று வீரராக களமிறங்கும் ஹார்திக் பாண்டியா…தோனி போட்ட ரகசிய ஸ்கெட்ச்…சென்னைக்கு அடித்த மெகா ஜாக்பாட்…!

Published

on

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பொறுப்பில் இருந்து முழுமையாக விலக முடிவெடுத்துள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு சீசன்களாக ரசிகர்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்புகள், மன அழுத்தம் மற்றும் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவரை ‘டிரேடிங் விண்டோ’ முறையில் பிற அணிகளுக்கு மாற்றத் தயாராகி வருகிறது. இந்த செய்தி வெளியான உடனே, ஹர்திக் பாண்டியாவைத் தங்களது அணியில் இழுக்க சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய முன்னணி ஐபிஎல் அணிகள் இப்போதே தீவிரமாக காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன.

ஹர்திக்கை வாங்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டி வருவதாக முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு கேப்டனானதால் மும்பை ரசிகர்களிடம் ஹர்திக் இழந்த நற்பெயரை, சிஎஸ்கே மீட்டுக்கொடுக்கும் என நம்பப்படுகிறது. தோனியுடன் ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் மிக நெருக்கமான நட்பு, அவர் சென்னை அணிக்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. இதற்காக சிஎஸ்கேவில் இருந்து சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரை மும்பைக்கு கொடுத்துவிட்டு, ஹர்திக்கை டிரேடு செய்ய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. நடப்பு சீசனில் மும்பை அணி 9வது இடத்தைப் பிடித்ததும் அவரை முற்றிலும் சோர்வடைய செய்துள்ளது. எனவே, அவர் மிட்-சீசனிலேயே மும்பை அணியில் இருந்து வெளியேறும் எண்ணத்தை நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.

Advertisement

மறுபக்கம் கேகேஆர் அணி தனது மிடில் ஆர்டரை மேலும் வலுப்படுத்த ஒரு தரமான இந்திய ஆல்-ரவுண்டரைத் தேடி வருகிறது. ஹர்திக்கைப் பெற்றுக் கொள்ள கேமரூன் கிரீன் அல்லது ரிங்கு சிங் போன்ற வீரர்களை மும்பைக்கு மாற்ற கேகேஆர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அந்த அணிக்கு இப்போது ஒரு வலுவான இந்திய கேப்டன் தேவைப்படுகிறார். குஜராத் அணியை சாம்பியனாக்கிய அனுபவம் கொண்ட ஹர்திக்கை வாங்கி, அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்க லக்னோ நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனால் வரவிருக்கும் நாட்களில் ஹர்திக் பாண்டியா எந்த அணிக்கு மாறப்போகிறார், எந்த அணிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in