பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்தது எப்படி..? பர்தா அணிந்து கருட மண்டபம் வரை சென்ற பெண்.. உடனடி விசாரணை நடத்த இந்து தமிழர் கட்சி கோரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்தது எப்படி..? பர்தா அணிந்து கருட மண்டபம் வரை சென்ற பெண்.. உடனடி விசாரணை நடத்த இந்து தமிழர் கட்சி கோரிக்கை..!!

Published

on

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் பர்தா அணிந்த பெண் ஒருவர் கருட மண்டபம் வரை வந்து சென்ற சம்பவம் தொடர்பாக, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் விசாரணை நடத்த வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்து சமய நம்பிக்கைகளுக்குப் புறம்பான வழிபாட்டு முறைகளையும், சிலை வழிபாட்டுக்கு எதிரான கோட்பாடுகளையும் கொண்ட பிற மதத்தைச் சேர்ந்த பெண், எந்த நோக்கத்திற்காக கோவிலின் முக்கிய பகுதி வரை வந்தார் என்பது குறித்து காவல்துறையும் கோவில் நிர்வாகமும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் அதில் கோரியுள்ளார்.

கோவிலின் பாதுகாப்பு நுழைவாயிலில் காவல்துறையினரும் தனியார் பாதுகாப்பு ஊழியர்களும் பணியில் இருக்கும்போது, முஸ்லிம் மத அடையாள உடையுடன் வந்த நபரை எந்த அடிப்படையில் உள்ளே அனுமதித்தனர் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்து கோவில்களுக்குள் நுழைவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உரிய வழிமுறைகளை வகுத்து தீர்ப்பளித்துள்ள நிலையிலும், இத்தகைய நிகழ்வு ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்து மத நம்பிக்கையும் வழிபாட்டில் ஈடுபாடும் கொண்டவர்கள் மட்டுமே கோவில்களுக்குள் வர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், கேரள மாநில கோவில்களில் பின்பற்றப்படுவதைப் போல பிற சமயத்தவர்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வமான விதிகளை தமிழகத்திலும் அறநிலையத்துறை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் ராம ரவிக்குமார் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in