“பிறப்புறுப்பு, உடலில் 91 காயங்கள்…” சிகரெட் சூடு..! 1 1/2 வயது குழந்தை கொலையில் திடுக்கிடும் திருப்பம்… வெளியான பகீர் தகவல்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பிறப்புறுப்பு, உடலில் 91 காயங்கள்…” சிகரெட் சூடு..! 1 1/2 வயது குழந்தை கொலையில் திடுக்கிடும் திருப்பம்… வெளியான பகீர் தகவல்கள்…!!

Published

on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள நெடுமங்காடு பகுதியில், அர்ஷித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோர விபரீதம் தொடர்பாகக் குழந்தையின் தாய் அகிலா மற்றும் அவரது காதலன் அஷ்கர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக, குழந்தை உணவு உண்ணும்போது அது தொண்டையில் சிக்கி மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று நாடகமாடியுள்ளார் அகிலா.

ஆனால், குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில், உடற்கூராய்வு செய்த பொது அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்தன. அந்த மருத்துவ அறிக்கையில், குழந்தையின் உடலில் சிகரெட்டினால் சுடப்பட்ட தழும்புகள், உடைந்த கைகள் மற்றும் பிறப்புறுப்பில் பலத்த காயங்கள் உட்பட 91 இடங்களில் கடுமையான சித்திரவதைச் சின்னங்கள் கண்டறியப்பட்டு, இது திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது.

Advertisement

குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த அஷ்கர் அவனது தலையைச் சுவற்றில் பலமாக மோதியுள்ளார்; இதனால் ஏற்பட்ட மூளை மற்றும் உட்புற உறுப்புகளின் ரத்தப்போக்கே மரணத்திற்கு முதன்மைக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அகிலாவுக்குத் தனது காதலனின் இந்த அத்துமீறல்கள் தெரிந்தும், அதைத் தடுக்காமல் வீட்டிலிருந்த ரத்தக்கறைகளைக் கழுவி, உடைகளை எரித்து ஆதாரங்களை அழிக்க அஷ்கருடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

மேலும், அஷ்கரின் முதல் மனைவி வரதட்சணைக் கொடுமையால் ஏற்கனவே ஓராண்டாகக் கோமா நிலையில் மருத்துவமனையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, குற்றவாளிகளைத் தெளிவுபடுத்துவதற்காகப் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தபோது, ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி அஷ்கரைச் சரமாரியாகத் தாக்கியதோடு அவனது காரையும் அடித்து நொறுக்கினர். இக்கொடூர வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் எனக் கேரள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in