கல்யாணத்துக்கு அப்புறம் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை…அடப்பாவமே! அப்படியே ராஷ்மிகா மாதிரியே இருக்காரே…விஜய் தேவரகொண்டாவே குழம்பிடுவார் போலயே! அச்சு அசலாக ராஷ்மிகா மந்தனா போலவே இருக்கும் இந்தப் பெண் யார்…?” – cinefeeds
Connect with us

CINEMA

கல்யாணத்துக்கு அப்புறம் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை…அடப்பாவமே! அப்படியே ராஷ்மிகா மாதிரியே இருக்காரே…விஜய் தேவரகொண்டாவே குழம்பிடுவார் போலயே! அச்சு அசலாக ராஷ்மிகா மந்தனா போலவே இருக்கும் இந்தப் பெண் யார்…?”

Published

on

இந்தியத் திரையுலகில் முன்னணி பான்-இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, ஆரம்பகால விமர்சனங்களை முறியடித்து இன்று உச்சத்தை தொட்டுள்ளார். தெலுங்குத் திரையுலகில் அவர் அறிமுகமானபோது, அவரது நடிப்பு மற்றும் தோற்றம் குறித்துப் பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாமல் தனது உழைப்பிலும் திறமையிலும் மட்டுமே கவனம் செலுத்திய ராஷ்மிகா, அடுத்தடுத்துப் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கி சாதனை படைத்தார். தமிழில் ‘சுல்தான்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், ஹிந்தியில் ரன்பீர் கபூர், சல்மான் கான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

திரையுலகில் சாதித்த அதே வேளையில், இவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமீபத்தில் ஒரு சுபநிகழ்ச்சி அரங்கேறியது. ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட காதல், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணத்தில் முடிந்தது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் ராஷ்மிகாவின் நடிப்புப் பயணத்திற்கு விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் முழு ஆதரவு அளித்து வருவதால், அவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், திருமணத்திற்குப் பின் அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘காக்டெயில் 2’ திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Advertisement

இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் ராஷ்மிகா மந்தனா போன்றே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் சிரிப்பு, முக அமைப்பு மற்றும் பேசும் விதம் என அனைத்தும் அப்படியே அச்சு அசலாக ராஷ்மிகாவை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். நெட்டிசன்களால் ‘லோ பட்ஜெட் ராஷ்மிகா’ என்று அன்போடு அழைக்கப்படும் அந்தப் பெண்ணின் பெயர் ‘சாபு’ என்று கூறப்படுகிறது. ராஷ்மிகாவின் சாயலில் இருக்கும் இவரது வீடியோக்கள் தற்போது இணையத்தில் சென்சேஷனலாகப் பரவி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in