காஸ்ட்லி பேட்டரி டூ குஷன் சீட்…நள்ளிரவில் மினி பஸ்ஸிற்குள் புகுந்த காதல் ஜோடி…லைட்டை அணைத்துவிட்டு, சிசிடிவி கேமராவை திருப்பி…காலையில் பஸ்ஸை எடுக்க வந்த டிரைவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சிசிடிவி காட்சியை பார்த்து போலீசாரே ஷாக்…!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

காஸ்ட்லி பேட்டரி டூ குஷன் சீட்…நள்ளிரவில் மினி பஸ்ஸிற்குள் புகுந்த காதல் ஜோடி…லைட்டை அணைத்துவிட்டு, சிசிடிவி கேமராவை திருப்பி…காலையில் பஸ்ஸை எடுக்க வந்த டிரைவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சிசிடிவி காட்சியை பார்த்து போலீசாரே ஷாக்…!”

Published

on

கோவை மாநகரின் வடவள்ளி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர வைத்துள்ளது. வடவள்ளி பகுதியில் தங்களது தினசரி பயண சேவையை முடித்த தனியார் மினி பஸ் ஒன்றின் ஊழியர்கள், நள்ளிரவில் அதனைச் சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டுத் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டியதும் அந்த பகுதிக்கு வந்த ஒரு இளைஞரும் பெண்ணும், சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து கொண்டு சத்தமில்லாமல் அந்த மினி பஸ்ஸுக்குள் ஏறியுள்ளனர். உள்ளே நுழைந்த உடனே வெளி ஆட்களுக்குச் சந்தேகம் வராதபடி பஸ்ஸின் விளக்குகளை அணைத்த அந்த இளைஞர், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே நடப்பது தெரியக்கூடாது என்பதற்காகப் பஸ்ஸின் ஜன்னல் கதவுகளையும் விவரமாக மூடியுள்ளார்.

பஸ்ஸின் உட்புறத்தில் பாதுகாப்புக்காகச் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கவனித்த அந்த இளைஞர், தங்களின் லீலைகள் பதிவாகாமல் இருக்க அந்த கேமராவை அப்படியே வேறு பக்கமாகத் திருப்பி வைத்துள்ளார். அதன்பின்னர் சுமார் 45 நிமிடங்கள் அந்த ஜோடி பஸ்ஸுக்குள் இருந்துள்ளது. பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது சும்மா செல்லாமல், மினி பஸ்ஸின் என்ஜின் பகுதியில் இருந்த விலையுயர்ந்த பேட்டரியைக் கழற்றியதுடன், பயணிகள் உட்காரும் ஒரு குஷன் சீட்டையும் கையில் தூக்கிக் கொண்டு விடியும் நேரத்திற்கு முன்பாகவே அங்கிருந்து தப்பியுள்ளனர். இவர்கள் பஸ்ஸை விட்டு வெளியேறும் காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த வேறொரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisement

மறுநாள் காலை பஸ்ஸை இயக்க வந்த ஓட்டுநரும் நடத்துநரும் பேட்டரி மற்றும் சீட் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பஸ்ஸில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், நள்ளிரவில் புகுந்த ஜோடி பஸ்ஸுக்குள் உல்லாசமாக இருந்துவிட்டு, பொருட்களைத் திருடிச் சென்ற விசித்திரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சுடிதார் அணிந்த ஒரு பெண்ணும், கையில் டாட்டூ குத்தி வட மாநிலத் தோற்றத்தில் இருக்கும் ஒரு இளைஞரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த ஜோடியின் லீலைகள் அடங்கிய சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in