“நகை கடன் பணத்தை செலுத்திய வாடிக்கையாளர்கள்…” பெண் அதிகாரியின் தில்லாலங்கடி வேலை… அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நகை கடன் பணத்தை செலுத்திய வாடிக்கையாளர்கள்…” பெண் அதிகாரியின் தில்லாலங்கடி வேலை… அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்….!!

Published

on

காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணுவின் அறிவுறுத்தலின்படி சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அதிரடித் தணிக்கை மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனையின்போது, வாடிக்கையாளர் ஒருவர் தனது நகைக்கடனை நேர் செய்வதற்காகச் செலுத்திய ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்து 419 நிதியானது, கூட்டுறவு சங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்குப் புத்தகத்தில் வரவு வைக்கப்படாமல் விடுபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய  விசாரணையில், அந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் எழுத்தராகவும் பொறுப்புச் செயலாளராகவும் பணியாற்றி வந்த லட்சுமி என்பவர், சங்கத்தின் பணக் கையிருப்பைக் குறைத்துக் காட்டி, வாடிக்கையாளரின் தொகையைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காகக் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட அவர் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆய்வுக்குழுவினர் பரிந்துரைத்ததை அடுத்து, லட்சுமியைப் பணியிடை நீக்கம்  செய்து சங்கத்தின் செயலாட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in