LATEST NEWS
“4-வது முறையாக சென்றதால் கோபம்…” மகள்களை ரூமுக்குள் பூட்டி அடித்தே கொன்ற தந்தை… ஒன்று கூடிய பஞ்சாயத்து… சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவரது மகள்களான லாலி (20), ஷீலா (18) ஆகிய இளம்பெண்களும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களைக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த காலங்களில் மூன்று முறை வீட்டை விட்டு ஓடிய இப்பெண்களைப் போலீசார் மீட்டுத் தந்தையிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நான்காவது முறையாக அவர்கள் சென்றபோது, தந்தை ராம்பிரசாத் மற்றும் அவரது மகன்கள் அவர்களைத் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு இழுத்து வந்ததோடு, இனி காதலர்களுடன் பேசக் கூடாது என ஊர் பஞ்சாயத்து மூலமாகவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கச் செய்துள்ளனர்.
இருப்பினும், கடந்த ஜூன் 8-ஆம் தேதி நள்ளிரவில் இரு சகோதரிகளும் தங்களது காதலர்களுடன் அலைபேசியில் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ராம்பிரசாத் நேரில் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். உடனே அவர் தனது இரு மகன்களுடன் சேர்ந்து, மகள்கள் இருவரையும் ஓர் அறைக்குள் பூட்டி மரக்கட்டைகளால் இரக்கமின்றி விபரீதமாகத் தாக்கியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இக்கொடூர ஆணவக் கொலை குறித்துத் தகவல் அறிந்து வந்த கூடுதல் எஸ்பி சித்தார்த் வர்மா தலைமையிலான போலீசார், இரு பெண்களின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்; மேலும், தலைமறைவாக உள்ள தந்தை ராம்பிரசாத்தைத் தேடி வருவதோடு, கொலைக்குத் துணையாக இருந்த அவரது இரு சிறு வயது மகன்களையும் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
