CRIME
அடச்சீ!.. நீயெல்லாம் ஒரு அப்பாவா?.. பெற்ற மகளை 2 ஆண்டாக வேட்டையாடிய காமுக தந்தை.. தஞ்சையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!
தஞ்சை அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த 44 வயது கொத்தனாரான ராஜா என்பவர், தனது 10 வயது மகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே திருமணமான இவர், தனது தம்பி மறைவிற்குப் பிறகு அவரது மனைவியையும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். தந்தையின் இத்தகைய அத்துமீறலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, இது குறித்துத் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தனது கணவரிடம் நியாயம் கேட்டபோது, அவர் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வல்லம் காவல் நிலையத்தில் தனது கணவருக்கு எதிராகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கனிமொழி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ராஜா தனது சொந்த மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாவைக் கைது செய்துள்ளனர். தன் மகளிடமே அநாகரிகமாக நடந்துகொண்ட தந்தையின் இச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
