திருமுடிவாக்கம் என்கவுண்டர்..! தலைமை காவலரைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை… போலீசார் சுட்டுப் பிடித்த பரபரப்புப் பின்னணி..!!! – cinefeeds
Connect with us

CRIME

திருமுடிவாக்கம் என்கவுண்டர்..! தலைமை காவலரைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை… போலீசார் சுட்டுப் பிடித்த பரபரப்புப் பின்னணி..!!!

Published

on

சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காலில் குண்டடிபட்டு படுகாயமடைந்த ரவுடி தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘கருப்பு’ என்ற ரவுடியைப் பிடிப்பதற்காகப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமுடிவாக்கம் பகுதியில் ரவுடி கருப்பை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, அவன் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளான். அவனைக் கைது செய்ய முயன்ற தலைமை காவலர் ஒருவரை ரவுடி கருப்பு கத்தியால் கையில் வெட்டிவிட்டு தப்பியோடப் பார்த்துள்ளான்.

Advertisement

தலைமை காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்குள் தடுக்க, போலீசார் தங்களின் தற்காப்பிற்காக அவனது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நிலைகுலைந்து விழுந்த ரவுடி கருப்பை மீட்ட போலீசார், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரைத் தாக்கிய ரவுடி சுடப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், காயமடைந்த தலைமை காவலருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in