CINEMA
நடிகைள் கவர்ச்சி காட்டுவதில் என்ன தவறு? அந்தளவுக்கு கவர்ச்சி காட்டலாம், தப்பே இல்லை – நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆவேசம்!
தென்னிந்திய சினிமாவில் பல படங்களின் தொடர்ந்து நடித்து வருபவர் ரகுல் பிரீத் சிங். தற்போது அவர் இந்தியில் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகும் பிஸியான ஒரு நடிகையாக சினிமாவில் ரகுல் ப்ரீத் சிங் வலம் வருகிறார். சினிமா நிகழ்ச்சிகள் பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர். மேலும் அவர் கிளாமரான உடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சில சமயங்களில் இது கடும் விமர்சனம் ஆகிறது.
ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது, நடிகைகளின் திறமைக்கு வளர்ச்சிக்கும் திருமணம் தடையாக இருக்காது. திருமணத்திற்கு பிறகும் வெற்றிகரமாக சினிமாவில் பயணிக்க முடியும். அதேபோல் கவர்ச்சி விஷயத்தில் அதை தவறாக பார்க்காமல் கலையின் வெளிப்பாடாக பார்க்கும் மனப்பான்மை உருவாக வேண்டும். கவர்ச்சியில் எல்லை மீறாத வரை அது தவறில்லை என்றும் நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியிருக்கிறார்.
