இயக்குனர் கே பாக்யராஜ் மறைந்தாலும் அவரது பார்வை மறையவில்லை… தனது கண்களை தானமாக வழங்கிய மனிதநேய பண்பாளர்! – cinefeeds
Connect with us

CINEMA

இயக்குனர் கே பாக்யராஜ் மறைந்தாலும் அவரது பார்வை மறையவில்லை… தனது கண்களை தானமாக வழங்கிய மனிதநேய பண்பாளர்!

Published

on

Director K Bhagyaraj

தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் இன்று காலை சென்னையில் காலமானார். காலையில் வாக்கிங் சென்று விட்டு திரும்பி வந்தபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். 2 வாரங்களுக்கு முன்புதான் அவரது குருநாதர் இயக்குனர் பாரதிராஜா காலமானார். இப்போது அவரது சிஷ்யர் பாக்யராஜ் திடீரென மறைந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜ் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் என திரையுலகினர் அரசியல் கட்சியினர் பலரும் கே பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

இயக்குனர் பாக்யராஜ் ஏற்கனவே தனது கண்களை தானம் செய்வதாக கூறியிருந்தார். அவர் இன்று காலை இறந்ததை அடுத்து அவரது கண்கள் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு பாக்யராஜின் கண்களை தானமாக பெற்று சென்றனர்.

மறைந்த பின்னரும் கூட அவர் யாரோ ஒருவரின் வாழ்வில் ஒளி ஏற்ற பார்வையாக போகிறார் என்பது கே பாக்யராஜின் மனிதநேயமிக்க சிறந்த பண்பை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியாக கூறுகின்றனர். நாளை மதியம் அவரது இறுதி சடங்குகள் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in