CINEMA
என்ன கொடும சார் இது? ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு அரசு பதவியா? முதல்வர் விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போன அரசியல் கட்சிகள்!
நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த 5 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி போய் உள்ளது. இதற்கு அரசியல் காரணங்கள் தான் பின்னணி என்று கூறப்படுகிறது இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் திரைப்பட தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணாவுக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது தமிழக மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய் தனது ஜோதிடருக்கு இதேபோல் அரசு பதவி அளித்ததால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு அந்த ஜோதிடரை அரசு பதவியில் இருந்து நீக்கம் செய்தார். இப்போது திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருக்கு அமைச்சருக்கு நிகரான தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை வழங்கி இருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சிகளும் அதிர்ந்து போயுள்ளன.
