இன்றைய நடிகைகள் திறமையானவர்கள், ஆனால் அந்த விஷயத்தை செய்ய மறுக்கிறார்கள், நடிகர்களுடன் அதை பகிர்ந்துக்கொள்ள முன்வர வேண்டும் – ஓபனாக பேசிய நடிகர் அக்‌ஷய் குமார்! – cinefeeds
Connect with us

CINEMA

இன்றைய நடிகைகள் திறமையானவர்கள், ஆனால் அந்த விஷயத்தை செய்ய மறுக்கிறார்கள், நடிகர்களுடன் அதை பகிர்ந்துக்கொள்ள முன்வர வேண்டும் – ஓபனாக பேசிய நடிகர் அக்‌ஷய் குமார்!

Published

on

Actor Akshay Kumar

பாலிவுட் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இன்றைய தலைமுறை நடிகைகள் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து தொழில்முறை அணுகு முறையுடன் செயல்படுகிறார்கள். அவர்களின் அர்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது.

முந்தைய கால நடிகைகளுடன் ஒப்பிடும்போது இன்றைய நடிகைகள் சற்றே பாதுகாப்பான முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக சவாலான கதாபாத்திரங்கள் அல்லது கதையின் தேவைக்காக பெரிய ரிஸ்க்குகளை எடுக்க அவர்கள் தயங்குகின்றனர். அதேபோல் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்கவும் பலர் விருப்பம் கட்டுவதில்லை. ஒரு படத்தில் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்தால் அது சினிமாவுக்கு புதிய பரிமாணத்தையும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும் வழங்கும்.

Advertisement

முன்பு பல நடிகர்கள் இணைந்து மல்டி ஸ்டார் படங்களில் நடித்துள்ளனர். தற்போது அந்த போக்கு குறைந்து வருகிறது. ஒரு நல்ல கதை மற்றும் வலுவான கதாபாத்திரம் இருந்தால் மற்ற நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள நடிகைகள் முன் வர வேண்டும். இது சினிமாத்துறையின் வளர்ச்சிக்கும் உதவும். எனவே இன்றைய நடிகைகள் மல்டி ஸ்டார் படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று நடிகர் அக்சய் குமார் கூறியிருக்கிறார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in