LATEST NEWS
ஜெய்ப்பூரில் பயங்கரம்… சகோதரியை தப்பாகப் பேசியதால் ஆத்திரம்… 10 வயது நண்பனின் தலையைத் துண்டித்த 11, 12 வயது சிறுவர்கள்…!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தங்களது சகோதரியைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்ற ஆத்திரத்தில் 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் சேர்ந்து, தங்களது 10 வயது நண்பனை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜெய்ப்பூரின் முஹானா பகுதியில் உள்ள ஒரு சாக்கடை கால்வாயில் இருந்து சிறுவனின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இந்த கொடூரக் கொலை வழக்கை போலீஸார் துப்பறிந்து குற்றவாளிகளான மூன்று சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையின்படி, பலியான சிறுவனும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அந்த 10 வயது சிறுவன் தனது நண்பனின் சகோதரியைப் பற்றி தவறான கருத்துக்களைக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு பழிவாங்கத் திட்டமிட்ட அந்த சிறுவர்கள், கடந்த ஜூன் 14 அன்று தங்களது நண்பனை பார்ட்டி வைப்பதாகக் கூறி ஆள் நடமாட்டமில்லாத ஒரு சாக்கடை கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அனைவரும் சேர்ந்து தின்பண்டங்களைச் சாப்பிட்ட பிறகு, மூன்று சிறுவர்களும் சேர்ந்து அந்த 10 வயது சிறுவனைத் தாக்கியுள்ளனர். முதலில் கழுத்தை ஸ்கார்ஃப் மூலம் நெரித்துக் கொன்றதோடு, கத்தியால் அவனது கழுத்து மற்றும் உடலில் கொடூரமாகக் குத்தியுள்ளனர். காணாமல் போன சிறுவனைத் தேடி வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி நடத்திய தீவிர விசாரணையில் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. தற்பொழுது அந்த மூன்று சிறுவர்களும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
