நெஞ்சை உலுக்கும் கொடூரம்…! திருமண ஆசை காட்டி கடத்தல்… 5 நாட்களாக சிறுமியை சித்திரவதை செய்த காம மிருகங்கள் கைது…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை உலுக்கும் கொடூரம்…! திருமண ஆசை காட்டி கடத்தல்… 5 நாட்களாக சிறுமியை சித்திரவதை செய்த காம மிருகங்கள் கைது…!

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது மதிக்கத்தக்க மைனர் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி, மர்ம நபர்கள் சிலர் வீட்டை விட்டு கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அந்தப் பெண்ணை மற்றொரு நகரத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சட்டவிரோத விடுதிகளில்  அடைத்து வைத்துள்ளனர். அங்கு அந்தப் பெண் கடந்த ஐந்து நாட்களாகக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி திடீரெனக் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவளது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஒரு ரகசிய இடத்திலிருந்து பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் முறையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இச்சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், மைனர் பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தச் சட்டவிரோத விடுதிகள் மற்றும் அதற்குத் துணையாக இருந்தவர்கள் குறித்தும், போக்சோ  சட்டத்தின் கீழ் போலீஸார் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in