உஷார் மக்களே! மின் ஆய்வாளர் வார்னிங்… தூங்கும் போது சார்ஜ் போட்டால் காத்திருக்கும் மாபெரும் ஆபத்து….மின் துறை அதிரடி…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உஷார் மக்களே! மின் ஆய்வாளர் வார்னிங்… தூங்கும் போது சார்ஜ் போட்டால் காத்திருக்கும் மாபெரும் ஆபத்து….மின் துறை அதிரடி…!

Published

on

தேசிய மின்சார பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட மின் ஆய்வாளர் உசேன் பாஷா பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். மின் விபத்துகளைத் தவிர்ப்பது மற்றும் அன்றாட வாழ்வில் மின்சாரத்தைப் பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் தூங்கும் போது செல்போன் உள்ளிட்ட எந்தவொரு மின் சாதனங்களையும் சார்ஜில் போடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், தரமற்ற போலி சார்ஜர்களை உபயோகிக்கக் கூடாது என்றும், வீடுகளில் உள்ள பிளக் சாக்கெட்டுகளில் கட்டாயம் ‘எர்த்’ இணைப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஈரமான துணியால் மின் சாதனங்களைச் சுத்தம் செய்யக் கூடாது, பழுதான பழைய வயர்களைப் பயன்படுத்தக் கூடாது மற்றும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு மின்பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in