சற்றுமுன் பரபரப்பு..! அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.வளர்மதி கட்சியில் இருந்து நீக்கம்… அதிரடி ஆக்க்ஷனில் எடப்பாடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சற்றுமுன் பரபரப்பு..! அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.வளர்மதி கட்சியில் இருந்து நீக்கம்… அதிரடி ஆக்க்ஷனில் எடப்பாடி..!!

Published

on

அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த வளர்மதி, கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த இவர், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் நாளை இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி இந்த அதிரடி ஒழுங்கு நடவடிக்கை முடிவை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இபிஎஸ் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in