“மாப்பிள்ளைக்கு தில்ல பாத்தியா.?” 1454 அடி உயரத்தில் ஆபத்தான நிச்சயதார்த்தம்… நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டிட உச்சியில் மோதிரம் மாற்றிய ரஷ்ய காதல் ஜோடி… இன்ஸ்டாவில் வைரலான வீடியோ.. அடுத்து நடந்த அதிர்ச்சி…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாப்பிள்ளைக்கு தில்ல பாத்தியா.?” 1454 அடி உயரத்தில் ஆபத்தான நிச்சயதார்த்தம்… நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டிட உச்சியில் மோதிரம் மாற்றிய ரஷ்ய காதல் ஜோடி… இன்ஸ்டாவில் வைரலான வீடியோ.. அடுத்து நடந்த அதிர்ச்சி…!

Published

on

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 1,454 அடி உயர உச்சியில், ரஷ்யாவைச் சேர்ந்த இவான் பீர்கஸ் மற்றும் ஏஞ்சலா நிக்கோலாவ் ஆகிய ஜோடி எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் அனுமதியுமின்றி ஏறியுள்ளனர். அங்கு அவர்கள் உலக அமைதியை வலியுறுத்தும் பேனர் ஒன்றை விரித்ததோடு, இவான் மண்டியிட்டு ஏஞ்சலாவுக்கு மோதிரம் மாற்றித் தனது காதலை ஆபத்தான முறையில் நிச்சயம் செய்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நியூயார்க் நகர போலீசார், கட்டிடத்தின் உச்சிக்குச் சென்று அந்த ஜோடியை எவ்வித அசம்பாவிதமும் இன்றி மீட்டுக் கைது செய்தனர். அவர்கள் மீது அத்துமீறி நுழைதல் (Burglary), பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தல், முறையற்ற நடத்தை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜோடி ஏற்கனவே உலகின் மிக உயரமான கட்டிடங்கள் மீது எவ்வித பாதுகாப்பும் இன்றி ஏறும் ‘ரூஃப்டாப்பிங்’ (Rooftopping) என்ற ஆபத்தான விளையாட்டிற்குப் புகழ்பெற்றவர்கள் என்பதும், இவர்களின் வாழ்க்கை நெட்பிளிக்ஸ் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in