மயங்கி விழுந்தப்போ தூக்கிட்டு ஓடுனேன்… இப்போ தேவையில்லாத ஆளாயிட்டேனா…! குஷ்பூ மகள் கல்யாண புறக்கணிப்பால் கொதித்தெழுந்த ராதா ரவி..!!! – cinefeeds
Connect with us

CINEMA

மயங்கி விழுந்தப்போ தூக்கிட்டு ஓடுனேன்… இப்போ தேவையில்லாத ஆளாயிட்டேனா…! குஷ்பூ மகள் கல்யாண புறக்கணிப்பால் கொதித்தெழுந்த ராதா ரவி..!!!

Published

on

இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூ தம்பதியினரின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த வாரம் கோவாவில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆனால், திரையுலகின் மூத்த நடிகரான ராதா ரவி இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளாதது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியது.

இது குறித்துப் பேசிய நடிகர் ராதா ரவி, குஷ்பூவின் மகள் திருமணத்திற்குத் தன்னை யாரும் அழைக்கவில்லை என்றும், அழைப்பு வராத காரணத்தினாலேயே தான் திருமணத்திற்குச் செல்லவில்லை என்றும் ஓப்பனாக விளக்கியுள்ளார். ஒரு காலத்தில் அவர்களுக்குத் தான் தேவைப்பட்டதாகவும், ஆனால் இப்போது தேவையில்லாத ஆளாகிவிட்டதாகவும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். தன்னை விட குஷ்பூ குடும்பத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத பலரைப் திருமணத்திற்கு அழைத்திருந்ததை தான் கவனித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், கடந்த காலங்களில் குஷ்பூவிற்குத் தான் செய்த உதவிகளை அவர்கள் மறந்துவிட்டதாக ராதா ரவி ஆதங்கப்பட்டுள்ளார். குஷ்பூ தேர்தலில் போட்டியிட்டபோது தன் வீட்டிற்கு வந்து ஆதரவு கேட்டதையும், ‘பாண்டித்துரை’ படப்பிடிப்பின் போது குஷ்பூ மயங்கி விழுந்தபோது அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியதையும், ஒகேனக்கல் படப்பிடிப்பின் போது புயல் காற்றில் சிக்கிய அவரைப் பாதுகாப்பாகத் தர்மபுரி வரை அழைத்துச் சென்றதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த பழைய சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு அவர்கள் ஏன் தன்னை அழைக்கவில்லை என்பதை குஷ்பூவிடம்தான் கேட்க வேண்டும் என்றும் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in