LATEST NEWS
காரில் புகுந்த எமன்… 80 கி.மீ வேகத்தில் சென்ற காரில் திடீரென படம் எடுத்த கோப்ரா…! கதறியபடி கீழே குதித்த பெண் ஓட்டுநர்…! துணிச்சலோடு போராடி பாம்பை மீட்ட நிஜ ஹீரோ..!!!
காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் மீனாட்சி சர்மா என்ற பெண், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை காலையில் அவர் தனது காரில் அலுவலகத்திற்கு புறப்பட்டார். இந்திராபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சுமார் 80 கி.மீ வேகத்தில் கார் சென்றுகொண்டிருந்த போது, திடீரென காரின் டேஷ்போர்டு பகுதியிலிருந்து 4 அடி நீளமுள்ள விஷப் பூச்சியான நல்லபாம்பு ஒன்று வெளியே வந்து படம் எடுத்து நின்றது. ஓட்டுநர் இருக்கைக்கு மிக அருகில் நின்ற பாம்பைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காரை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு வெளியே குதித்து உயிர் தப்பினார்.
அதே நேரத்தில், விஐபி பாதுகாப்பு பணிக்காக அந்த வழியாகச் சென்ற போக்குவரத்துத் துறையின் மீட்பு வாகனத்தில் காவலர் ஓம் பிரகாஷ் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் தீபக் ஆகியோர் வந்தனர். சாலையின் நடுவே ஒரு கார் நின்றிருப்பதையும், ஒரு பெண் பயந்து போய் பதற்றத்துடன் இருப்பதையும் கண்ட ஓம் பிரகாஷ் வாகனத்தை நிறுத்தினார். விசாரித்தபோது காரில் விஷப்பாம்பு இருப்பதாக அந்தப் பெண் நடுங்கியபடி கூறினார். சற்றும் யோசிக்காமல் துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் ஓம் பிரகாஷ், ஒரு கம்பியின் உதவியோடு காரின் உள்ளே ஒளிந்திருந்த பாம்பை லாவகமாக வெளியே எடுத்தா
வெளியே எடுக்கப்பட்ட அந்த நல்லபாம்பிற்கு எந்தவொரு காயமும் ஏற்படாதவாறு, அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் கேனுக்குள் அதை பத்திரமாக அடைத்தனர். பின்னர் அந்தப் பாம்பு வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. அதிவேகமாக வாகனங்கள் செல்லும் அந்த மேம்பாலத்தில், கார் ஓட்டும்போது பாம்பு வந்ததால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. எனினும், மீனாட்சியின் சமயோசித புத்தியாலும், போக்குவரத்து காவலர் ஓம் பிரகாஷின் அசாத்திய துணிச்சலாலும் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் காவலரின் வீரத்தைப் பாராட்டி வருகின்றனர்.
