LATEST NEWS
நிஜ உலக ‘அந்நியன்..! “தப்பு செய்யுறவன் தப்பவே முடியாது” திருடர்களைப் பிடித்து டேப் போட்டு கம்பத்தில் கட்டிவைக்கும் ‘பேட்மேன்’… இணையத்தைக் கலக்கும் அதிரடி வீடியோ..!!
நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ (Lagos de Moreno) என்ற நகரில், திருடர்களைப் பிடித்து வித்தியாசமான முறையில் தண்டிக்கும் மர்ம நபர் ஒருவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் “மெக்சிகன் பேட்மேன்” ன்ற பெயரில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. அந்தப் பகுதியில் இருசக்கர வாகன (மோட்டார் சைக்கிள்) திருட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சட்டத்தை தன் கையில் எடுத்த இந்த மர்ம நபர், திருடர்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய திருடர்களை இந்த மர்ம நபர் அதிரடியாகப் பிடித்துள்ளார். அவ்வாறு பிடிபட்ட நபர்களைப் பொதுவெளியில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் தெருவிளக்குக் கம்பங்களில் தடிமனான டக்ட் டேப் (Duct Tape) கொண்டு அசைய முடியாதவாறு பிணைத்துக் கட்டியுள்ளார். மேலும், அவர்களின் நெற்றியில் ஸ்பானிஷ் மொழியில் ‘திருடன்’ (Ratero) என்று எழுதியும், முகத்தில் பூனை மீசைகளை வரைந்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர்கள் திருடியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிள்களையும் ஆதாரமாக அவர்கள் அருகிலேயே நிறுத்தி வைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த மர்ம நபரை ஒரு நிஜ உலக சூப்பர் ஹீரோவாக மக்கள் கொண்டாடி வந்தாலும், மெக்சிகோ நாட்டுப் காவல்துறையினர் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சட்டம் மற்றும் நீதித்துறையைத் மீறி எவரும் இவ்வாறு பொதுமக்களைத் தண்டிக்கக் கூடாது என்று கூறியுள்ள போலீசார், கம்பங்களில் கட்டப்பட்ட நபர்களை “பாதிக்கப்பட்டவர்களாகக்” கருதி, அந்த மர்ம ‘பேட்மேனை’ தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
