LATEST NEWS
கூகுள் மேப்பை நம்பிப் போன இடத்தில் நேர்ந்த விபரீதம்…! தேனி அருகே நேருக்கு நேர் லாரி மீது மோதிய கார்… ஒருவர் பரிதாப பலி..!!!
கேரள மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி நான்கு பேர் காரில் பயணம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, மதுரை செல்வதற்கான வழக்கமான முதன்மைச் சாலையைக் காட்டாமல், கூகுள் மேப் செயலி அவர்களுக்கு பெரியகுளம் – வத்தலகுண்டு செல்லும் மாற்றுப் பாதையைக் காட்டியுள்ளது.
கூகுள் மேப் காட்டிய வழியை நம்பி ஓட்டுநர் காரை அந்தச் சாலையில் செலுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, எதிரே அதிவேகமாக வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் கொடூர தாக்கத்தால் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.
இவ்விபத்தில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த மற்ற 3 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கூகுள் மேப்பை நம்பி மாற்றுப் பாதையில் சென்றதால் இந்த விபரீதம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
