LATEST NEWS
வைரல் வீடியோ… ! 8 மாசமா 5 மணி நேரத்துக்கு மேல தூங்குனதே இல்ல…! நெஞ்சை உலுக்கும் ராபிடோ ஓட்டுநரின் கண்ணீர் கதை..!!!
டெல்லியில் வசிக்கும் ஷிகர் என்ற நபர் ஒரு நாள் காலை அலுவலகத்திற்குத் தாமதமானதால், மெட்ரோ ரயிலுக்குப் பதிலாக ராபிடோ பைக் புக் செய்துள்ளார். பைக் ஓட்டுநர் அடுத்த 2 நிமிடங்களிலேயே அங்கு வந்து சேர்ந்ததுடன், ஷிகர் கீழே வர 5 நிமிடங்கள் தாமதமானதால் அதற்குள் 3 முறை போன் செய்துள்ளார். பைக்கில் ஏறிய ஷிகர், “ஏன் இவ்வளவு அவசரம்?” என்று விளையாட்டாகக் கேட்டபோது, அந்த ஓட்டுநர் “நானும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும், எனக்கும் நேரமாகிறது” என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார். இந்த சுவாரசியமான உரையாடலை ஷிகர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இக்கதை வைரலானது.
அந்த ஓட்டுநர் ஒரு தனியார் நிறுவனத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றி மாதம் 20,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அதில் ஒரு குழந்தை பிறவியிலேயே மாற்றுத்திறனாளி என்பதால், அந்தப் பிள்ளையின் மருத்துவச் செலவு மற்றும் மருந்துகளுக்கே அவரது சம்பளத்தில் பாதியான 10,000 ரூபாய் செலவாகிவிடுகிறது. எஞ்சிய பணத்தில் குடும்பத்தை நடத்துவது கடினம் என்பதால், தன் மாற்றுத்திறனாளிக் குழந்தையின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தைக் காப்பாற்றவும் அவர் பகுதி நேரமாக ராபிடோ பைக் ஓட்டத் தொடங்கியுள்ளார்.
https://x.com/shekhu04/status/2072286410346844292?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2072286410346844292%7Ctwgr%5Ef9cda9d81c008014870039f0f0605b21d46a45b4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.tv9hindi.com%2Ftrending%2Frapido-rider-struggle-story-full-time-private-job-five-hour-sleep-goes-viral-3839120.html
அவரது தினசரி உழைப்பு பார்ப்போரைக் கலங்கடிக்கும் வகையில் உள்ளது. தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை ராபிடோ பைக் ஓட்டுகிறார். பின்னர் காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரை தனது வழக்கமான தனியார் நிறுவன வேலையைச் செய்கிறார். அலுவலகம் முடிந்ததும் மீண்டும் இரவு 11 மணி வரை பைக் ஓட்டுகிறார். “இவ்வளவு அலைச்சலில் எப்போது தூங்குவீர்கள்?” என்று கேட்டதற்கு, கடந்த 8 மாதங்களாக தான் 5 மணி நேரத்திற்கு மேல் தூங்கியதே இல்லை என்று அவர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய வாழ்வாதாரப் போராட்டத்திலும் எந்தவொரு புகாரும் இன்றி உழைக்கும் அந்தத் தந்தையின் உறுதியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
