கோயில்களில் லஞ்சம் வாங்கினால் அவுட்…! இடைத்தரகர்களுக்கு மரண அடி…! நேரடியாக அமைச்சருக்கே புகார் அனுப்பலாம்… அமைச்சர் எஸ்.ரமேஷ் அதிரடி உத்தரவு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோயில்களில் லஞ்சம் வாங்கினால் அவுட்…! இடைத்தரகர்களுக்கு மரண அடி…! நேரடியாக அமைச்சருக்கே புகார் அனுப்பலாம்… அமைச்சர் எஸ்.ரமேஷ் அதிரடி உத்தரவு..!!!

Published

on

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ், கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் இடைத்தரகர்களின் லஞ்சப் புகார்களை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் மாறுவேடத்தில் சென்று லஞ்ச முறைகேடுகளை நேரடியாகக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் மீது அதிரடி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோயில்களில் பக்தர்களிடம் வி.ஐ.பி தரிசனம், மொட்டை அடித்தல் மற்றும் அர்ச்சனைப் பிரசாதம் போன்ற சேவைகளுக்கு சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கும் இடைத்தரகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement

பொதுமக்கள் தங்களுக்கு நேரிடும் இதுபோன்ற முறைகேடுகள், லஞ்சம் மற்றும் அநியாய வசூல்கள் குறித்து ஆதாரங்களுடன் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்காக அமைச்சரின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அனுப்பி வைக்கலாம் என்றும், இதன் மூலம் கோயில் நிர்வாகத்தில் முழு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in