LATEST NEWS
பகீர்..! தவெகவை தந்திரமாக கவிழ்த்துவிட்டு… துணை முதல்வர் பதவி கனவில் இருந்த செந்தில் பாலாஜி.. ஸ்டாலினுக்கே தெரியாமல் போட்ட ரகசிய ஸ்கெட்..!!
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைத் தந்திரமாகக் கவிழ்த்துவிட்டு, மீண்டும் திமுகவை ஆட்சிப் பீடத்தில் அமர வைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காய் நகர்த்தியதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கே தெரியாமல் இந்த ரகசியத் திட்டத்தைச் செயல்படுத்தி, அதன் மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் நற்பெயர் பெற்றுத் தமிழகத்தின் துணை முதல்வர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவோடு அவர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போதைய தவெக அரசு இந்த ரகசியச் சதியை முன்கூட்டியே கண்டறிந்து, செந்தில் பாலாஜியின் திட்டங்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினரை வளைக்க முயன்ற ₹35 கோடி பேரம் பேசும் வழக்கில், காவல்துறை வலை வீசித் தீவிர விசாரணை நடத்தி வருவதால், செந்தில் பாலாஜி மற்றும் அவரது தரப்பினர் தற்பொழுது செய்வதறியாது திகைத்து நிற்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
காவல்துறையின் இந்தத் தீவிரப் பிடி இறுகியுள்ளதால், துணை முதல்வர் கனவில் இருந்த செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் அவரது சகோதரர் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே பெரும் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.
