தலைமறைவாகி இருந்துகொண்டே முன்ஜாமீனுக்கு மல்லுக்கட்டும் செந்தில் பாலாஜி… கைகழுவிய திமுக.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தலைமறைவாகி இருந்துகொண்டே முன்ஜாமீனுக்கு மல்லுக்கட்டும் செந்தில் பாலாஜி… கைகழுவிய திமுக.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரைத் தமிழகக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. தவெக அரசுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்காக, அக்கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ. 35 கோடி பேரம் பேசியதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள நிலையிலேயே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கு செந்தில் பாலாஜி தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றத்தை (SC) நாடவும் அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement

இந்த இக்கட்டான விவகாரத்தில் திமுக தலைமை தங்களை முழுமையாக ஒதுக்கி வைத்திருப்பது, செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பயந்து, அவர்கள் நீதிமன்றப் பாதுகாப்பைத் தேடி நகர்வதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in