LATEST NEWS
உலகையே உலுக்கும் பகீர்..! ஈரான் உச்ச தலைவர் கமேனிக்கு 5 மாதங்களுக்குப் பின் இறுதிச்சடங்கு ஏன்..? உடல் எப்படி சிதையாமல் இருந்தது..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!!
ஈரான் நாடு அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானில் நிலவிய கடுமையான போர்ச் சூழல் மற்றும் உச்சக்கட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அவரது உடல் உடனடியாக அடக்கம் செய்யப்படவில்லை. சுமார் 5 மாதங்கள் கடந்த நிலையில், தற்பொழுது தெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் 5 முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வளவு நீண்ட நாட்களாக அவரது உடல் எவ்வாறு சிதையாமல் இருந்தது என்ற கேள்விக்கு, கமேனியின் உடல் அதிநவீன குளிர்சாதன (Freezer) வசதியுடன் கூடிய ரகசியப் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததாக ஈரான் அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. தற்போது போர் பதற்றம் சற்றே தணிந்துள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட் மொசல்லா (Grand Mosalla) வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் மீறி, தங்களது ஆன்மீக மற்றும் அரசியல் தலைவருக்கு விடை கொடுக்க லட்சக்கணக்கான ஈரான் மக்கள் அங்கு கண்ணீருடன் திரண்டு வருகின்றனர்.
