இதெனப்பா கூத்த இருக்கு..! “உங்க மேல ரொம்ப வியர்வை நாத்தம் அடிக்குது” காசைத் திருப்பிக் கொடுத்துட்டு.. “தயவுசெஞ்சு இனி ஜிம்முக்கு வராதீங்க” என துரத்தியடித்த நிர்வாகம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதெனப்பா கூத்த இருக்கு..! “உங்க மேல ரொம்ப வியர்வை நாத்தம் அடிக்குது” காசைத் திருப்பிக் கொடுத்துட்டு.. “தயவுசெஞ்சு இனி ஜிம்முக்கு வராதீங்க” என துரத்தியடித்த நிர்வாகம்..!!!

Published

on

சீனாவின் ஹாங்ஜோ (Hangzhou) நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம் , ‘ஷி’ என்ற நபரின் உடலில் இருந்து வீசிய கடுமையான பசிநாற்றத்தின் காரணமாக, அவரது 3 ஆண்டு கால உறுப்பினர் சேர்க்கையை (Membership) ரத்து செய்துள்ளது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வியர்வை சிந்துவது வழக்கமானது என்றாலும், இவருடைய வியர்வையின் துர்நாற்றம் பிற உறுப்பினர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் இந்த விசித்திர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்ததை அடுத்து, ஜிம் நிர்வாகம் அவரது மீதிப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, “தயவுசெய்து இனி வராதீர்கள்” என குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துவிட்டது.

பாதிக்கப்பட்ட நபர் கடந்த மே 2025 இல் 6,388 யுவான் (சுமார் 940 அமெரிக்க டாலர்) செலுத்தி மூன்று வருட உறுப்பினர் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார். தீவிர உடற்பயிற்சி ஆர்வம் கொண்ட இவர், ஒரு தசாப்தத்திற்கு முன்பு 125 கிலோவாக இருந்த தனது எடையைக் கடுமையான உழைப்பால் 80 கிலோவாகக் குறைத்து, வாரத்திற்கு ஐந்து நாட்கள் ஜிம்மிற்குச் சென்று வந்துள்ளார். தனக்கு மற்றவர்களை விட அதிகமாக வியர்க்கும் என்பதை ஒப்புக்கொண்ட ஷி, பிறருக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் பயன்படுத்திய கருவிகளைத் துடைக்க எப்போதும் கூடுதல் துண்டுகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இருப்பினும், அவர் பயன்படுத்திய டிரெட்மில் மற்றும் இதர உபகரணங்களின் அருகே செல்லவே பிற உறுப்பினர்கள் பயந்து ஓடியதாக ஜிம் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அவரைத் தனியான மூலையில் உள்ள கருவிகளைப் பயன்படுத்துமாறும், கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் வருமாறும் ஜிம் நிர்வாகம் அறிவுறுத்தியும் பலன் அளிக்கவில்லை. இறுதியில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, மீதமுள்ள நாட்களுக்கான கட்டணத் தொகையான 3,888 யுவானை (சுமார் 570 டாலர்) ஜிம் நிர்வாகம் திருப்பி அளித்ததுடன், இழப்பீடாக மற்றொரு ஜிம்மின் மூன்று மாத கால இலவச அனுமதியையும் அவருக்கு வழங்கியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in