யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! அதிமுகவில் இணையும் அண்ணாமலை..? இதுதான் சரியான வழி… ‘We the Leaders’ திட்டத்திற்கு நடுவே புதிய திருப்பம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! அதிமுகவில் இணையும் அண்ணாமலை..? இதுதான் சரியான வழி… ‘We the Leaders’ திட்டத்திற்கு நடுவே புதிய திருப்பம்…!!

Published

on

அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் முக்கிய மாவட்ட செயலாளர்கள் சிலர் கே. அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர தீவிர விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் சரிவிலிருந்து கட்சியைக் காப்பாற்றவும், தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் அண்ணாமலையின் வருகை உதவும் என சில மாவட்ட செயலாளர்கள் ஆலோசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அண்ணாமலை தற்போது ‘We the Leaders’ என்ற தனது சொந்த அமைப்பை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் அவருக்கு அழைப்பு விடுப்பது குறித்த ஆலோசனைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில், அதிமுக நிர்வாகிகளின் இந்த அழைப்பை அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா அல்லது தனது சொந்தக் கட்சித் திட்டத்தில் உறுதியாக இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in