LATEST NEWS
திருமாவுக்கு துணை முதல்வர் பதவி.. தீர்மானம் நிறைவேற்றிய விசிக… அதிர்ச்சியில் தவெக..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்குத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று ஓமலூரில் நடைபெற்ற விசிக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்றும் அக்கட்சியினர் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
விசிக நிர்வாகிகளின் இத்தகைய அதிரடி செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஒருவித அரசியல் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதே நேரத்தில், தற்போதைய சூழலில் இந்த இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.
