LATEST NEWS
சோப்பு விளம்பரமா..? இல்ல பாசமா..? பாம்புக்கு ஹமாம் HAMAM சோப்பு போட்டு குளிப்பாட்டிய நபர்.. வைரல் வீடியோவால் நடுங்கிப்போன இணையவாசிகள்..!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பாம்புபிடி வீரரான ராம்கரண் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் மஞ்சள் சாரைப்பாம்பிற்கு சோப்பு போட்டு, குளிப்பாட்டி அழகு பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “பாம்பு என்றால் படையும் நடுங்கும்” என்ற பழமொழிக்கு மாறாக, இவர் அந்தப் பாம்பை ஒரு செல்லக் குழந்தையைப் போல பாவித்து பராமரித்து வருகிறார்.
https://x.com/sheik_twitts/status/2073090213543575992/video/1
குளிப்பாட்டும் போது அந்தப் பாம்பும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அமைதியாக அவரிடம் குளித்துக் கொள்கிறது. மேலும், அவர் அந்தப் பாம்புடன் விளையாடுவது, சேர்ந்து படுத்து உறங்குவது போன்ற வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஹமாம் சோப்புக்கு விளம்பரம் தேடித்தந்துவிட்டீர்கள்” என்றும், “பாம்புக்கு இவ்வளவு பாசமா!” என்றும் வியப்புடன் கமெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
