“ஸ்டாலின் லண்டனுக்கு ஓடிட்டாரு, எ.வ.வேலு ஹாஸ்பிட்டல்ல படுத்துட்டாரு” ஓடி ஒழியாம நேர்மைய நிரூபிங்க… திமுகவை உலுக்கிய அர்ஜுன் சம்பத்தின் அதிரடிப் பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலின் லண்டனுக்கு ஓடிட்டாரு, எ.வ.வேலு ஹாஸ்பிட்டல்ல படுத்துட்டாரு” ஓடி ஒழியாம நேர்மைய நிரூபிங்க… திமுகவை உலுக்கிய அர்ஜுன் சம்பத்தின் அதிரடிப் பேச்சு..!!

Published

on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக அரசு மற்றும் திமுக அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை வரவேற்பதாகக் கூறிய அவர், ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்திற்கு அஞ்சி ஓடி ஒளியாமல் தங்களின் நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தானாக முன்வந்து சரணடைய வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ளார் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பயத்தின் காரணமாகவே லண்டன் சென்றுள்ளார் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் போதையை ஒழிக்க அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்திய அர்ஜுன் சம்பத், திமுக மற்றும் அதிமுகவினரே பெரும்பாலான சாராய ஆலைகளை நடத்துவதாகக் கூறினார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இதுபோன்ற பின்னணி இல்லாததால் அவரால் மதுக்கடைகளை மூட முடியும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதே நேரத்தில் பிற கட்சியினர் தங்களின் ஊழல் பணத்தைக் காப்பாற்றவே தவெக-வில் இணைந்து வருவதாகவும், விஜய் இதுபோன்ற சுயநலப் போக்குகளை ஊக்குவிக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in