LATEST NEWS
“அந்த மனசு தான் சார் கடவுள்” அமைச்சரவையில் நானா..? தவெக நாற்காலியை மறுத்த திருமாவளவன்… வன்னி அரசுக்கு விட்டுக்கொடுத்த ரகசியம்…!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தவெக அமைச்சரவையில் தாம் சேரப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாக மறுத்து, அதுகுறித்த தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக விளக்கியுள்ளார் . தவெக அமைச்சரவையில் திருமாவளவன் தானே நேரடியாகச் சேர்ந்து அமைச்சராகலாம் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ரவிக்குமார் தன்னிடம் யோசனை கூறியதாகத் திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது தெரிவித்துள்ளா . ஆனால், அந்த விருப்பத்தைத் தான் உடனடியாக மறுத்துவிட்டதாக அவர் தற்பொழுது தெளிவுபடுத்தியுள்ளார் .
அமைச்சரவை நாற்காலியில் அமர்வதை விட, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார் . கட்சியின் வெற்றிக்காக 30 ஆண்டு காலம் அயராது உழைத்த வன்னி அரசு போன்ற மூத்த நிர்வாகிகள் அந்த நாற்காலியில் அமர வேண்டும் என்று பெருந்தன்மையுடன் தான் கூறியதாகத் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார் . விசிக கட்சியின் மூத்த தொண்டர்களுக்கும் தியாகிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் .
ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சராக அமர வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் . இத்தகைய அரசியல் பரபரப்பான சூழலில், அமைச்சரவையில் தான் சேரப் போவதில்லை என்றும், மற்ற நிர்வாகிகளுக்கு வழிவிடுவதாகவும் திருமாவளவன் பேசியுள்ள இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது
